போதை மாத்திரை வாங்க வந்த வாலிபர் கைது
சோழவந்தான்: சோழவந்தானில் போஸ்டலில் வந்த போதை மாத்திரைகளை வாங்க வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போதை மாத்திரை கடத்தல்கும்பலைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களிலிருந்துஅவற்றைபோலி முகவரியின் பேரில் தங்களது அலைபேசி எண்ணை மட்டும் கொடுத்து போஸ்டலில் ஆர்டர் செய்து நுாதனகடத்தலில்ஈடுபட்டுள்ளனர். போஸ்ட்மேன்கள் முகவரி தெரியாமல் அந்த எண்ணுக்கு போன் செய்தவுடன் நேரில் மாத்திரைகளை பெற்றுச் செல்வர். இதேபோல் சோழவந்தான் கீழப்பச்சேரி பகுதியில் போலி முகவரியில் போஸ்டலில் வந்த வலி நிவாரணி போதை மாத்திரை பார்சலைசமயநல்லுாரைச் சேர்ந்த சீனிவாசகண்ணன் மகன் கிஷோர்குமார் 25, வாங்குவதற்காகவந்தார். போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தனிப்படையினரின் தகவலில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையிலான போலீசார் கிஷோர்குமாரை கைது செய்து , 900 'டேபென்டடோல் ஹைட்ரோ குளோரைடு- 100 மி.கி'மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேல்விசாரணை நடக்கிறது.
மேலும்
-
பல்கலை பேராசிரியரிடம் ரூ.2.50 லட்சம் ‘அபேஸ்’
-
நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி
-
‘நீட்’ அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 2ம் கட்ட மாப் -அப் சுற்றுக்கு விருப்பத்தேர்வு
-
இருளில் மூழ்கிய கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகள் அவதி
-
பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
-
மணிமுக்தாற்றில் கழிவுகள் கொட்டிய செப்டிக் டேங்க் வேன் பறிமுதல்