அடித்து துன்புறுத்தியதால் தற்கொலை முயற்சி மனைவி புகாரில் ‘சஸ்பெண்ட்’ காவலர் கைது
ஓசூர்: பெண் காவலரான மனைவியை, அடித்து துன்புறுத்திய அவரது கணவரான, ‘சஸ்பெண்ட்’ காவலர் கைது செய்யப்பட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் கலைச்செல்வன், 35. இவர் மனைவி தமிழ்செல்வி, 35. ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் காவலராக உள்ளார்.
ஓசூர் அடுத்த பேரிகை அருகே வசிக்கும், கணவரை பிரித்த, 26 வயது பெண் ஒருவருடன் பழகிய கலைச்செல்வன், அப்பெண்ணிற்கு குழந்தை கொடுத்து ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம், 26ம் தேதி, ஓசூர் மகளிர் ஸ்டேஷனில் அப்பெண் புகார் செய்தார். அதன் படி விசாரித்து, காவலர் கலைச்செல்வனை, ‘சஸ்பெண்ட்’ செய்து, மாவட்ட எஸ்.பி., அனிதா உத்தரவிட்டார்.
‘சஸ்பெண்ட்’ நடவடிக்கையால், ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் கலைச்செல்வன் தங்கியிருந்தார். அவர் மனைவி தமிழ்செல்வி, இப்பிரச்னையால் மன அழுத்தம் ஏற்பட்டு விடுமுறை எடுத்து வீட்டிலிருந்தார்.
தம்பதிக்குள் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கலைச்செல்வன், தமிழ்செல்வியை அடித்து துன்புறுத்தினார். மனமுடைந்த தமிழ்செல்வி, எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்செல்வி புகாரில், பெண் துன்புறுத்தல் சட்டத்தில் வழக்குப்பதிந்த ஓசூர் டவுன் போலீசார், ‘சஸ்பெண்ட்’ காவலர் கலைச்செல்வனை நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
பல்கலை பேராசிரியரிடம் ரூ.2.50 லட்சம் ‘அபேஸ்’
-
நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி
-
‘நீட்’ அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 2ம் கட்ட மாப் -அப் சுற்றுக்கு விருப்பத்தேர்வு
-
இருளில் மூழ்கிய கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகள் அவதி
-
பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
-
மணிமுக்தாற்றில் கழிவுகள் கொட்டிய செப்டிக் டேங்க் வேன் பறிமுதல்