மாணவர்கள் மனித நேயத்துடன் மருத்துவ சேவையாற்ற வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு
சென்னை: ‘‘எம்.பி.பி.எஸ்., பட்டதாரிகள், மனித நேயத்துடன் மருத்துவ சேவையாற்ற வேண்டும்,’’ என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தெரிவித்தார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் 5வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், விழாவில் பங்கேற்று, 125 எம்.பி.பி.எஸ்., மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
மேலும், காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர் ஒருவரின் மகளுக்கு, நீட் தேர்வுக்கான புத்தகங்களை கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் வழங்கினார். மருத்துவமனையில், தீக்காய சிகிச்சை பிரிவு, தீவிர கண்காணிப்பு பிரிவு, இரைப்பை குடல் மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை திறன் ஆய்வகம் ஆகியவற்றை, கவர்னர் திறந்து வைத்தார்.
விழாவில், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பேசுகையில், ‘‘இளம் மருத்துவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை சமூக நலனுக்காக, குறிப்பாக தொலைதுார, போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாத மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக பயன்படுத்த வேண்டும்.
மனிதநேயத்துடன் மருத்துவ துறையில் சிறந்து விளங்க வேண்டும்,’’ என்றார்.
மேலும்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் கோரிக்கைக்கு புதிய கட்டுப்பாடுகள்! வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
பல்கலை பேராசிரியரிடம் ரூ.2.50 லட்சம் ‘அபேஸ்’
-
நுாதன முறையில் நண்பரிடம் கார் மோசடி
-
‘நீட்’ அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 2ம் கட்ட மாப் -அப் சுற்றுக்கு விருப்பத்தேர்வு
-
இருளில் மூழ்கிய கடற்கரை சாலை சுற்றுலாப் பயணிகள் அவதி
-
பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்