வழக்கறிஞர் கொலை முயற்சி வழக்கில் பெண் கைது

காட்டுமன்னார்கோவில்: கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், கக்கன் நகரை சேர்ந்தவர் தங்க விக்ரம்; 42; வழக்கறிஞரான இவர், நேற்று முன்தினம் காலை பெரியகுளம் நோக்கி நடந்து சென்றார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல், அவரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. பலத்த காயமடைந்த வழக்கறிஞர், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக கக்கன் நகரில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் பதுங்கியிருந்த மதகடி, அழகர் வட்டம் பகுதியை சேர்ந்த ஜம்புலிங்கம் மனைவி நிலவழகி,45; என்பவரை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர்.

இதில், மாடு திருட்டு வழக் கு தொடர்பாக தங்க விக்ரமிற்கும், ஜம்புலிங்கத்திற்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜம்புலிங்கம், அவரது மனைவி நிலவழகி ஆகியோர் கூலிப்படையை ஏவி, தங்க விக்ரமை கொலை செய்ய முயன்றது தெரிந்தது. உடன், போலீசார், நிலவழகியை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement