வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகள் உள்பட 4 பேர் கைது
காரிமங்கலம்: காரிமங்கலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகள் உள்பட, 4 பேரை, காரிமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில மாதங்களில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், டவுன் பகுதி
யில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடினர். நேற்று முன்தினம் நள்ளிரவு காரிமங்கலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியாக வந்த ஹோண்டா காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், 2 இளம்பெண்கள், 2 ஆண்கள் மற்றும் காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு உட்பட வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன. நால்வரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேக
மடைந்த போலீசார், நால்வரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்
கனிக்கோட்டை கோட்டைவாசல்
பகுதியை சேர்ந்த ஆனந்த், 42, அவரது தம்பி சந்தோஷ் 40, ஆனந்தின் மகள் யசோதா, 19, மற்றும் யசோதாவின் தோழியான தேன்கனிக்கோட்டை ஜவளகிரியை சேர்ந்த வெண்ணிலா, 22, என தெரிந்தது. இவர் பாலக்கோடு அரசு மகளிர் கல்லுாரியில் பி.ஏ., முடித்துள்ளார். யசோதா பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். நால்வரும் காரிமங்கலம் அருகே சொட்டாண்டஹள்ளியில், வாடகை வீட்டில் தங்கி, பகல் நேரங்களில் பைக்கில் சுற்றி வந்து, ஆள் நடமாட்டம் குறைவான வீடுகளை நோட்டமிட்டு, அவற்றை மொபைல்போனில் படம் எடுத்து கொண்டு, பின் இரவில் அவர்களுடைய காரில் சென்று, திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒன்றரை பவுன் நகை, 40,000 ரூபாய் மற்றும் பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள், காஸ் சிலிண்டர், திருட்டுக்கு பயன்
படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நால்வரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.