ராகுலைப் போல் கீழ்த்தரமான விமர்சனம் கூடாது: மோடி உத்தரவு!
புதுடில்லி: 'வரும், 2029ல் ராகுல் தான் பிரதமர்' என, காங்கிரசார் கூறி வருகின்றனர். 'பக்கத்து நாடான, நேபாளத்தில் எப்படி ஒரு, 'ராப்' பாடகரை அங்குள்ள இளைஞர்கள், பிரதமர் பதவியில் அமர வைத்தனரோ, அப்படி இங்கும் நடக்கும். மோடி காலம் முடிந்துவிட்டது. கம்புகளால் மோடியை அடித்து வெளியேற்றுவோம்' என, கண்டபடி பேசி வருகின்றனர். சமீபத்தில், ராகுல் தான் நடத்திய போராட்டங்களில், பிரதமர் மோடியை மரியாதை குறைவாகவும், ஆபாசமாகவும் பேசினார். தொடர்ந்து, பேசியும் வருகிறார்.
இந்த பேச்சுகளையும், ராகுலின் நடவடிக்கைகளையும், பா.ஜ.,வினர் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், அதற்கு பதிலடியும் அளித்து வருகின்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி, தன் கட்சியினருக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
'என்னை பற்றி ராகுல் எவ்வளவு கேவலமாக பேசினாலும் பரவாயில்லை. அதற்கு எதிராக நாமும் கீழ்தரமாக விமர்சனம் செய்யக் கூடாது. மக்கள் அனைத்தையும் பார்க்கின்றனர். யார் அவர்களுக்கு தேவை என்பதை மக்களே முடிவு செய்வர். நீங்கள் எதுவும் பேச வேண்டாம்' என, மோடி கறாராக சொல்லி விட்டாராம். காங்., மூத்த தலைவர்களுக்கும், ராகுலின் இந்த கீழ்தரமான விமர்சனம் பிடிக்கவில்லையாம். ஆனால், அவரிடம் இதை சொல்ல தயங்குகின்றனர்.
வாசகர் கருத்து (4)
ஜெகதீசன் - ,
11 அக்,2026 - 18:04 Report Abuse
சரியான அறிவுறுத்தல். அந்த கூட்டத்தின் கீழ்த்தரத்துக்கு பாஜக இறங்க கூடாது. மக்களே அந்த கோமாளி கூட்டங்களை விரட்டி அடிப்பாங்க. 0
0
Reply
ramesh - ,
11 அக்,2026 - 16:21 Report Abuse
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் நான் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயிலில் வந்து சேர குறைந்த பட்சம் 10 மணி நேரம் ஆகும்... இப்போது 5 1/2 மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்து விடுகிறேன்... நாட்டின் அனைத்து துறைகளும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நாட்டுக்கு தேவை இல்லாத ஒன்று... அதை ராகுல்காந்தி நிருபிக்கிக்கிறார் 0
0
Reply
ருத்ரன் - ,
11 அக்,2026 - 13:48 Report Abuse
பிரதமர் மோடிஜி அவருடைய பதவிக்கும், வயதுக்கும் அதிக அளவு கண்ணியத்தை கடைபிடிக்கிறார். சந்தோஷம் என்றாலும், சில சமயம் முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் பிரதமர் அவர்களே. இது சார்ஜிகள் ஸ்ட்ரைக் காலம் பிரதமரே. திருந்துகிறார்களா என்று ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கலாம். பின்பு மறு கன்னத்தில் அறைய வேண்டியது தான். எதற்காக இவர்களிடம் பொறுமை காக்க வேண்டும். நம் கண்ணியத்தையும் விட்டுக்கொடுக்க கூடாது, அறையவும் வேண்டும் என்றால், நம் ஊரில் உள்ள மர்ம நபர்களை வைத்து, பாத்ரூமில் வழுக்கி விழ வையுங்கள். 0
0
Reply
ராஜா - ,
11 அக்,2026 - 07:28 Report Abuse
ராகுல் இருக்கும் வரை மோடி தான் பிரதமர். 0
0
Reply
மேலும்
-
ஊழல் வழக்கில் கைதான மாஜி அமைச்சர் மகேஷூக்கு ஜாமின் இல்லை; வழக்கு ஒத்திவைப்பு
-
கல்வித்தகுதி குறித்து சர்ச்சை; இந்தோனேசியா துணை அதிபர் பதவி ராஜினாமா
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
Advertisement
Advertisement