பதுக்கலால் தாறுமாறாக உயர்கிறது அரிசி விலை: வறட்சியை காரணம் காட்டி மக்களை வஞ்சிக்கும் வியாபாரிகள்
- நமது சிறப்பு நிருபர் -:
எல் நினோ பாதிப்பால் ஏற்பட்டு வறட்சியால், அரிசி வரத்து ஒருபுறம் குறைந்தாலும், அடுத்தடுத்த மாதங்களில் விலையேற்றத்தின் போது கொள்ளை லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, தற்போதுள்ள இருப்பையும் சில வியாபாரிகள் பதுக்கி வைப்பதால், தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறாக எகிற துவங்கி உள்ளது. இதனால் சாமான்ய மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தில், 2025 - 26ம் ஆண்டில், 64.20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், 52 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு எல் - நினோ பாதிப்பால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பளவு, 5.5 லட்சம் ஏக்கரிலிருந்து 2.5 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.
தற்போது, காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாததால், 12 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள வேண்டிய சம்பா, தாளடி சாகுபடி, 8 லட்சம் ஏக்கரில் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நெல் சாகுபடி 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக, வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கு ஆண்டுக்கு 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், 75 முதல் 80 லட்சம் டன் வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி, அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
இதனால், தமிழகத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 25 முதல் 30 லட்சம் டன் வரை அரிசி கொண்டு வரப்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், நெல் சாகுபடி பரப்பளவு குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என, கூறப்படுகிறது.
இருப்பினும், தமிழகத்தில் உள்ள அரிசி வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து, அரிசியாக அரைத்து இருப்பு வைக்கின்றனர். பின்னர், விலை உயர்வை பயன்படுத்தி, கூடுதல் லாபம் ஈட்டுவதற்காக, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, கல்லணை கால்வாய் உழவர்கள் கூட்டமைப்பு தலைவர் மாரியப்பன் கூறியதாவது:
இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுதும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். அவர்கள், நெல்லை அரிசியாக அரைத்து, இருப்பு வைத்துக்கொண்டு, எல் நினோ பாதிப்பை காரணம் காட்டி, வறட்சி காலத்தில் அரிசி விலையை உயர்த்துவதற்காக, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளதால், அரிசி விலை உயர்ந்து வருகிறது. அரிசி செயற்கை தட்டுப்பாடு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, அரிசி விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
@quote@அரிசியை தொடர்ந்து மளிகை பொருளும்
கிலோவுக்கு ரூ.10 முதல் 20 வரை உயர்வு
அரிசியை தொடர்ந்து, மளிகை பொருட்களும் கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மொத்த மளிகை வியாபாரி குருபிரசாத் கூறியதாவது:
மளிகை பொருட்களின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ, 140 ரூபாய்க்கு விற்பனையான உளுந்து, 150 ரூபாய்; துவரம் பருப்பு, 150லிருந்து 160 ரூபாய்; பொட்டுக்கடலை, 100லிருந்து 120 ரூபாய்; கடலை பருப்பு, 90லிருந்து, 100 ரூபாய்; நிலக்கடலை, 140லிருந்து 170 ரூபாய்; முந்திரி, 900லிருந்து, 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும், பாதாம் பருப்பு, 1,200லிருந்து, 1,400 ரூபாய்; வற்றல் மிளகாய், 220லிருந்து, 340 ரூபாய்; பாசி பருப்பு, 110லிருந்து, 130 ரூபாய்; நாட்டு கொண்டை கடலை - சிவப்பு ரகம் 80லிருந்து, 100 ரூபாய், வெள்ளை ரகம், 120லிருந்து, 140 ரூபாய்; தட்டை பயறு, 110லிருந்து 130 ரூபாய்; சீரகம், 330லிருந்து, 360 ரூபாய்; வெந்தயம், 120லிருந்து, 160 ரூபாய்; பட்டாணி, 50லிருந்து, 60 ரூபாய் என, விலை உயர்ந்தள்ளது.
மளிகை பொருட்கள், ஆறு மாதத்தில், 40 முதல் 50 ரூபாயும், கடந்த இரண்டு மாதத்தில் 10 முதல், 20 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய்களுக்கு, மத்திய அரசு இறக்குமதி வரியை ஐந்து சதவீதம் அளவுக்கு குறைத்ததால், கோல்டு வின்னர் போன்ற சூரியகாந்தி எண்ணெய் வகைகள், கிலோ, 190லிருந்து, 180 என, 10 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு வார இடைவெளியில், பொன்னி பச்சரிசி (பழையது), 26 கிலோ, 1,700 ரூபாயில் இருந்து, 1,900 ரூபாய் என, 200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கிச்சடி புழுங்கல் அரிசி, 2,120லிருந்து, 2,200 ரூபாய் என, 80 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.quote
All rice regularly going to ethanol factories to like this low rain situation also,but wheat not go to Ethanal factories?
வியாபாரி கிடையாது அரிசி ஆலை அதிபர்கள்
அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்ந்தால் எங்களுக்கு என்ன? அரிசியை யார் பதுக்கினால் எங்களுக்கு என்ன? எங்க விசயண்ணாதான் இலவச பேருந்தும், தாய்மாமன் சீரும் கொடுத்துட்டார்ல?அதுக்கு மேல அவரு என்னதான் செய்ய முடியும்? பாவம் இல்லையா விசயண்ணா?
govt cannot do anything.Politicians are the richest landlords all over India.Whest dal trade are in the hands of punjab maharashtra UP farmers.They fund all the political parties do not pay any tax and enjoy life.Who cares for common man
இதில் மக்கள் கவலைப்பட ஒன்றுமே இல்லை...... 70% நகரவாசிகள் தினசரி ஹோட்டல்களில் தான் சாப்பிடுகின்றனர் அப்படி இருக்கும் போது இந்த விலை உயர்வு ஒரு பொருட்டே அல்ல
ஹோட்டலில் இலவசமாகவா கொடுப்பார்கள் அறிவு இல்லாத ...
தடுக்க வேண்டிய அரசு
ரீல்ஸ் ஆட்சி நடத்தி கொண்டு உள்ளது முதல்வர் அம்சங்கள் கையில் வித்தைகள் செய்து கொண்டு உள்ளனர்
ஒவ்வொரு அரிசி கூடவுனிலும் ஒவ்வொரு அரிசி ஆலைகளிலும் குறைந்தபட்சம் 5 லட்சம் மூட்டைகளை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்
மத்திய மாநில அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு மானியத் தொகையில் கடன் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்
பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் பிச்சு கிட்டு போகுது . மக்கள் சந்தோசமா இருக்காங்க
இலவசம் இருக்கும்போது விலைஏறினால்என்ன இறங்கினால் என்னப் பதுக்கினால் என்ன பதுக்காவிட்டால் என்ன
ஒரு கிலோ அரிசிக்கு ரூ 20 , ஏறினால் என்ன ரூ 50 ஏறினால் என்ன பெண்களுக்கு இலவச வெட்டி பயணம் இருந்தால் போதும் குடிமகன்களுக்கு இருக்கவே இருக்கிறது டாஸ்மாக்.