கம்யூ., ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: கம்யூ., கட்சி தலைவர்கள் கைது செய்ததை கண்டித்து, இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சிகள் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக்கோரி, நேற்று டில்லி
யில் நடப்பதாக அறிவித்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற, இ.கம்யூ., பொதுச் செயலாளர் ராஜா மற்றும் இ.கம்யூ., (எம்.எல்.,) தலைவர்கள் உட்பட பலரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, தர்மபுரியில், இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சிகள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தர்மபுரி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் குமார், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் உட்பட பலர் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement