திருப்பதிக்கு பக்தர்கள் பாத யாத்திரை

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், படப்பள்ளியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் ஆண்டுதோறும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்னறர். அதன்படி இந்தாண்டு நடைபயணம் நேற்று தொடங்கியது.

இந்த ஆன்மிக பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக பக்தர்கள் கடந்த 11 நாட்கள் கடுமையான விரதம் இருந்து, விரதம் முடிந்ததை தொடர்ந்து, பயணத்தின் தொடக்கமாக படப்பள்ளியில் உள்ள புகழ்பெற்ற திம்மராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினர்.தொடர்ந்து பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி, பாரம்பரிய முறைப்படி மேல்விளக்கு ஏற்றி தங்களது திருப்பதி பாதயாத்திரையை தொடங்கினர். பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்
களுக்கு கிராம மக்கள் மற்றும் ஊர்மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து, வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர். பல ஆண்டு
களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய பாதயாத்திரை, படப்பள்ளி பகுதியில் ஆன்மிக நம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

Advertisement