மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கிருஷ்ணகிரி: புரட்டாசி மாத அமாவாசையான நேற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, காவேரிப்பட்டணம் மற்றும் பெண்ணேஸ்வர மடம் அருகே தென்பெண்ணை ஆற்றில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.
* ஒகேனக்கல் காவிரியாற்றில் முதலைப்பண்ணை பகுதியில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்து, பூஜை செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
* தர்மபுரி மாவட்டம், கம்பை
நல்லுார் அடுத்த இருமத்துார், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை உள்ளிட்ட தென்பெண்ணையாறு ஓடும் இடங்களில் மக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
* ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்
கரையில், ஆதிபராசக்தி அம்மன், ஜலகண்டேஸ்வரர் கோவில், துர்கா பரமேஸ்வரி கோவில், முனீஸ்வரன் கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இங்குள்ள தெப்பக்குளம் பகுதியில், புரட்டாசி மகாள அமாவாசையான நேற்று, நுாற்றுக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
* ஊத்தங்கரை அடுத்த, அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அனுமந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, ஆற்றில் விட்ட பின், புனித நீராடினர்.

Advertisement