அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் சங்கம் வாழ்த்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்கத் தலைவர் சோலமலை தலைமையில் நடந்தது.

புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, மேட்டுப்பாளையத்தில் புதிதாக கம்பன் கழகம் துவக்கிய தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகளுக்கு, சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிப்பது, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சட்ட நிபுணர் நவநீதம் பிள்ளைக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பு செயலாளர் மணி, பொதுச் செயலாளர் தாமோதரன், இயக்க செயலாளர் ஜெயராமன், துணைத்தலைவர் முருகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement