பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
சென்னை: பாகிஸ்தான் பயங்கரவாதி ஷாசாத் பட்டி கூட்டாளிகள், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவவலையடுத்து, அந்த மாவட்டங்களில், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாசாத் பட்டி, பயங்கரவாதியாக உருவெடுத்துள்ளார். இவர், 'ஷாசாத் பட்டி நெட்ஒர்க்' என்பதன் சுருக்கமாக, எஸ்.பி.என்., என்ற அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளார்.
இவரது தலைமையில் செயல்படும் கும்பல், நம் நாட்டு இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு தயார் செய்வதாக கூறப்படுகிறது. இது, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
அவர்கள் விசாரணை நடத்தி, கடந்த, செப்., 16ம் தேதி, தஞ்சாவூரில் பதுங்கி இருந்த எஸ்.பி.என்., அமைப்பைச் சேர்ந்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த மக்சூத் அலி, 21 என்பவரை, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையடுத்து, தஞ்சாவூரில் யாசர் அப்துல், 45, என்பவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பதுங்கியுள்ள கூட்டாளிகளை தேடும் பணியில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், எஸ்.பி.என்., அமைப்பை சேர்ந்தவர்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலங்களை குறி வைத்து, சதிச் செயல்களை நடத்த திட்டமிடட்டு வருகின்றனர். முக்கியமாக, காஸ் சிலிண்டர்களை, காரில் ஏற்றிச் சென்று காவல் நிலையங்கள் மீது மோதி தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே சிக்கிய நபர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், அவர்களின் கூட்டாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முந்தைய கழகத்தின் ஆட்சியில் தீவிரவாத ஆதரவாளர்களின் புகலிடமாக தமிழகம் இருந்தது. பெயர் மட்டுமே மாறிய இன்றைய கழகத்தின் ஆட்சியிலும் அதே நிலைமைதான் நீடிக்கிறது.
பிரியாணி கடைகளை அலசுங்கள் ... மாட்டுவான்கள் ..
நல்லா விசாரணை முடித்து சொலிய முடிங்க! சிறை வைத்தால் அரசாங்கத்திற்கு வெட்டி செலவு?
மற்ற இடங்களில் கருத்தை வன்மமாகத் திணிக்கும் அப்துல் ரஹீம் என்பவர் இது போல் ஆதாரத்துடன் இதுக்கும் செய்தியைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்வார்.
தமிழகத்தின் மையப் பகுதியின் மாவட்டங்களில் இவர்கள் ஊடுருவியிருபப்து மிகவும் ஆபத்தானது. டெல்டா மாவட்டங்களில் இவர்கள் சாதாரண மக்கள் போல் இருந்து கொண்டு, தேச நலனுக்கு எதிராக திட்டம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
மத்திய மாநில அரசுகள் கடுமையாக சோதனை போட வேண்டும் நாட்டின் பாதுகாப்பில் எந்த தயக்கமும் மாநில அரசுக்கு இருக்க கூடாது, திமை ஆட்சியில் கோவையில் பல ரநூற்றுக்கனக்கானவர்கள் உயிரை இழந்துள்ளார்கள்
இவனைப் போன்றவர்களுக்கு ஓட்டுரிமை தரவேண்டும் என்றுதான் ராகுல் மம்தா கரப்பான்பூச்சிகள் உள்ளிட்ட தேச விரோதிகள் போராடுகிறார்கள்.
இங்கே உள்ள சில கட்சிகளின் ஆதரவோடு இதை செய்கிறார்கள். முதலில் இங்கு உள்ளவர்களை பிடித்து உள்ளே போடுங்கள்.
ஓரிறைவனே இந்த இழிசெயலை ஏற்கமாட்டான் ..... தவறு வழிகாட்டி மீது ........
திமுக, விசிக போன்ற கட்சி தலைவர்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் பயங்கரவாதி பதுங்கிய இடம் தெரியும்
இதை மத்திய அரசு ஏன் இதுவரை செய்யவில்லை ? ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே ?மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்