வடிவுடையம்மன் கோவில் ஆதிசேஷ குளத்தில் தீ
திருவொற்றியூர்: வடிவுடையம்மன் கோவில் ஆதிசேஷ தீர்த்த குளத்தில் தீ பற்றி எரிந்த புற்களை, தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் வெளியே ஆதிசேஷ தீர்த்த குளம் உள்ளது. தண்ணீரின்றி, வறண்டு போன இக்குளத்தில் புற்கள் காய்ந்திருந்தன.
இந்நிலையில், நேற்று மாலை, குளத்தின் புற்களில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. காற்றின் வேகம் காரணமாக, தீ மளமளவென பற்றி எரிந்ததால், வெண்புகை கிளம்பியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது
Advertisement
Advertisement