குழந்தையை தத்து பெற்றுத்தருவதாக ரூ.1.77 லட்சம் மோசடி; பெண் கைது
கோவை: குழந்தையை தத்து பெற்றுத்தருவதாக கூறி 1.77 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை,ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த அமிரின்தாஜ், 34, என்பவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆனது. குழந்தை இல்லை. தத்து எடுக்க முடிவு செய்தார்.
இதற்காக பச்சாபாளையத்தில்பேன்சி கடை நடத்தி வரும் சத்தியஷீலா யு.பி.ஐ., வாயிலாகரூ.1.77 லட்சம் பெற்றார்.
பணத்தை பெற்ற பின்னும் குழந்தையை தத்து எடுக்க ஏற்பாடு செய்யவில்லை. அமிரின்தாஜ் விசாரித்தபோது,பணம் தர மறுத்தார்.
அமிரின்தாஜ் புகாரின்படி ராமநாதபுரம் போலீசார் சத்தியஷீலாவை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் கவுன்சிலிங் அளிக்கும் பணிசெய்து வந்தது தெரிந்தது. ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் கூறுகையில், ‘‘இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரிக்கிறோம். குழந்தையை தத்து எடுப்போர், சட்டரீதியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது