ஆவியூர் துணை சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, சளி, சிறு காயங்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற துணை சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர். தற்போது போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், தொடர் சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவ வசதி பெற தொலைதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆவியூர் துணை சுகாதார நிலையத்தை 24 மணி நேர மருத்துவ சேவையுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, டாக்டர், செவிலியர்கள், தேவையான மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். போதிய மருந்துகள், அவசர சிகிச்சை வசதிகள், ஆய்வக பரிசோதனை மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால் ஆவியூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு ஆவியூர் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது