தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
- வெப்படை வழியாக அமைய உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை ரத்து
செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்
மாவட்டம், சங்ககிரி பகுதியில் இருந்து தொடங்கி, நாமக்கல் மாவட்டம்
வெப்படை, பள்ளிப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் வழியாக சென்று,
திருப்பூர் மாவட்ட வெள்ளகோவில் பகுதி வரை தேசிய நெடுஞ்சாலை புதியதாக
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்ததால், நாமக்கல் மாவட்டம்
பள்ளிப்பாளையம் பகுதியில் படவீடு, சவுதாபுரம், பாதரை,
காடச்சநல்லுார், பாப்பம்பாளையம், எலந்தகுட்டை உள்ளிட்ட பல பகுதியை
சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், இந்த
திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் ஆலோசனை கூட்டம், நேற்று
இரவு பாப்பம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் நடந்தது.
கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, குமார பாளையம் தாசில்
தாரிடம் தனித்தனியாக மனு கொடுப்பது என, முடிவு செய்தனர். 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது