கறுப்பு கொடி போராட்ட அறிவிப்பால் 2.30 மணி நேரம் காத்திருந்த போலீசார்
ஈரோடு,:இந்திய
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும்,
டில்லியில் அறவழியில் போராடியவர்கள் மீதான போலீசாரின்
அடக்கமுறையை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்
நேற்று காலை, 10:00 மணிக்கு கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என
அறிவித்திருந்தனர்.
இதனால் காலை, 9:30 மணிக்கே, 65 போலீசார்,
அதிவிரைவு படையினர் கலெக்டர் அலுவலகம் முன் குவிக்கப்பட்டனர்.
அலுவலக நுழைவு வாயில் முன் பேரிகார்டு போட்டு தடுப்பு
ஏற்படுத்தினர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு பின்னரும் வராததால், டவுன்
டி.எஸ்.பி., முத்துகுமார் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
இதனால்
சாலை மறியல், கலெக்டர் அலுவலகம் முன் கறுப்பு கொடி காட்டுவதை
தவிர்த்து, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆர்ப்பாட்டமாக
மாற்றப்பட்டது.
மதியம், 12:15 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது கறுப்பு கொடியுடன் வந்த இருவரிடம் இருந்து கொடியை போலீசார்
பறித்தனர். ஞானேஸ்குமார் உருவப்படத்துக்கு தீ வைத்து எரிக்க
முயன்றதையும் போலீசார் தடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக
வாலிபர் சங்க மாநில செயலாளர் சம்சீர் அகமது, மாவட்ட செயலாளர் நவீன்,
மாவட்ட தலைவர் தசரதன் என, 25 ஆண், ஒரு பெண் என, 26 பேர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், 12:45 மணிக்கு பின் அவர்களே
சென்றுவிட்டனர்.
அதேசமயம் கைது மற்றும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக குவிக்கப்பட்ட, 65க்கும் மேற்பட்ட போலீசாரும்,
இரண்டரை மணி நேரம் காத்திருந்த நிலையில் பணிக்கு திரும்பினர்.
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது