சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை கரூர், அக். 12
கரூர்
ஜவஹர் பஜாரில், பண்டிகை முடியும் வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்ல தடை
விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
ஜவஹர் பஜாரில் ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்
உள்ளன. தற்போது, பண்டிகை தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கானோர்
புத்தாடை மற்றும் பல்வேறு பொருட்களை வாங்க வருவர். இதனால், ஜவஹர்
பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில்,
லாரி உள்பட சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், கரூர் ஜவஹர்
பஜார் பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே,
சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரத்தில்
செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். அந்த
உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.
பண்டிகை முடியும் வரை, சரக்கு வானங்கள் வந்து செல்வதை தடுக்க,
போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
கிரானைட் வீரமணி வீட்டில் 55 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது