மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு; தவெகவின் பலம் 109ஆக அதிகரிப்பு

9

சென்னை: ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். எம்எல்ஏவாக பதவியேற்ற 10 நாளில் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பிறகு முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தனர்.

இந்த இரு தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் இவர்கள் இருவருமே தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதில், மதுராந்தகத்தில் 20,040 ஓட்டு வித்தியாசத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் 9,471 ஓட்டு வித்தியாசத்தில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (அக்.,12) நடந்த நிகழ்ச்சியில் தவெக எம்எல்ஏக்கள் இருவரும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதன்மூலம், சட்டசபையில் தவெக எம்எல்ஏக்களின் பலம் 109ஆக அதிகரித்தது.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், அருண்ராஜ், மரிய வில்சன்,ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகிய முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

@block_Y@

முதல்வரிடம் வாழ்த்து



பதவியேற்ற கையோடு இரு எம்எல்ஏக்களும் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.block_Y

Advertisement