இனி பள்ளிகளில் வாரத்தில் 5 நாள் விளையாட்டு வகுப்பு; அமைச்சர் ராஜ்மோகன்
சென்னையில் திருத்திய பள்ளிக்கால அட்டவணையை வெளியிட்டு அவர் பேசியதாவது;
நீண்ட நாட்களாக தினந்தோறும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டு வந்தனர். வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விளையாட்டு வகுப்பு என்பதை மாற்றி, வாரத்தில் 5 நாட்கள் என்பதை திருத்திய கால அட்டவணை வழியாக வழங்குகிறோம்.
இனி வாரத்தில் 5 நாட்கள் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் என்பது நனவாகிறது. தினமும் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்புகள் இருக்கும். இந்த வகுப்புகளை எக்காரணம் கொண்டு நிறுத்தி வைக்கக்கூடாது. அதற்கு மாறாக மாணவர்களை விளையாட்டுகளில் ஊக்குவிக்க வேண்டும்.
பள்ளிகளில் எந்த குழந்தையையும் விளையாடும்போதும் கூட ஒதுக்கி வைத்து விடாதீர்கள். ஜாதி, மதம், நிறம் என பாகுபாடு காட்டி ஒதுக்கி வைக்காதீர்கள். ஒலிம்பிக் பதக்கத்தை தமிழகத்தின் மைதானத்தில் இருந்து கொண்டு வரவேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
மேலும்
-
லக்ஷ்மி - செப் குணால் கபூர் கூட்டணியில் 'தீபாவளி டிலைட்ஸ்' சீசன் 2
-
இந்தியாவின் வெற்றியால் உலகம் பயன் பெறும்: பிரதமர் மோடி உறுதி
-
'ஸ்டார்ட்அப்' நிறுவனர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி; சென்னை மெட்ரோ பயணத்தில் நடந்தது இதுதான்!
-
அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
-
எல்லாமே அரைகுறை தானா; சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் தாக்கல் செய்த மனுவில் 14 குறைபாடுகள்!
-
போராட்டம் நடத்திய கரப்பான் கும்பல் மீண்டும் கைது