போராட்டம் நடத்திய கரப்பான் கும்பல் மீண்டும் கைது
நமது நிருபர்
டில்லியில் தடை விதிக்கப்பட்ட ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைமை தேர்தல் கமிஷனர் ராஜினாமா செய்யக்கோரி கரப்பான் கட்சியினர், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜந்தர் மந்தரில் அவர்கள் நடத்திய போராட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று போலீசார் அறிவித்தனர்.
அது மட்டுமின்றி, கரப்பான் கட்சியின் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர், ஓராண்டுக்கு அமைதிக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்திலும் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர், போலீசாரின் தடுப்புகளை தாண்டிக்குதித்து ஜந்தர் மந்தருக்கு சென்று விட்டனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வர்; கைது நடவடிக்கை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (5)
Nesan - JB,இந்தியா
13 அக்,2026 - 13:31 Report Abuse
வெளியே வராதா பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, உள்ளே தள்ளனும். 0
0
Reply
Nanchilguru - ,இந்தியா
13 அக்,2026 - 13:11 Report Abuse
நல்ல பேரு ... கரப்பான் கும்பல் 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
13 அக்,2026 - 11:23 Report Abuse
அரிப்பு எடுத்த கை . கால்கள் அழுகும்வரை சொரிஞ்சேட்டே இருக்கும் என்பது உலக நியதி .அதேபோல் கரப்பான் கட்சி ஆளுங்க போராட்டம் என்கிற பெயரில் இனிமே தெருத்தெருவாக பைத்தியம் பிடிச்சு அலைய போரான்வ .. பேஷ் பேஷ் .. 0
0
Reply
ருத்ரன் - ,
13 அக்,2026 - 11:02 Report Abuse
அது மட்டும் போதாது. கொஞ்சம் லாடம் கட்டுங்கள். சிறுவயதிலிருந்தே பெற்றோர் சொல் கேட்காமல் வளர்ந்த தருதலைகள். இவர்கள் பெரும்பாலும் காலேஜ் ட்ராப் அவுட்டாக இருப்பார்கள். கையில் காசு கிடையாது. காங்கிரசும், கரப்பான்களும் இவர்களை சரியாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். வீட்டுக்கு அடங்காத, பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் அடி வாங்காதவர்கள், போலீசிடம் அடி வாங்குவார்கள். 0
0
Reply
ராஜா - ,
13 அக்,2026 - 10:48 Report Abuse
உள்ளே தூக்கி போடாமல் கையெழுத்து வாங்கி வெளியே விட்டால் இப்படிதான். 0
0
Reply
மேலும்
-
ரூ.2000க்கு அதிகமான யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம்: தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமல்
-
ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் ஏன்; அமைச்சர் நிர்மல்குமார் சொல்வது இதுதான்
-
பிறக்காத குழந்தைகளின் உணவை உண்கிறோம்: மண் வளத்தை மேம்படுத்தத் துரிதமாகச் செயல்படுங்கள்!
-
கோவில்களுக்கு மொபைல்போன் கொண்டு செல்லலாம்: கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி
-
தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றிய பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை!
-
டில்லியில் அனுமதியின்றி போராட்டம், தடுப்புகள் சேதம்; இண்டி கூட்டணி தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு
Advertisement
Advertisement