கோவில்களுக்கு மொபைல்போன் கொண்டு செல்லலாம்: கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி
சென்னை: கோவில்களில் பக்தர்கள் இனி தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆப் செய்து எடுத்துச் செல்லலாம், தடை இல்லை என்று ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
2026ம் ஆண்டு செப்.1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள முக்கியமான 52 கோவில்களில் மொபைல்போன்களை பக்தர்கள் கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், உடனடி மற்றும் அவசர தேவைகளுக்காக யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழல்களை சந்தித்தனர்.
எனவே, இந்த தடையை நீக்க வேண்டும் என்று பக்தர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கோரிக்கைகள் எழுந்து வந்தன. பக்தர்களின் தொடர் வேண்டுகோளை கருத்தில் கொண்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை தற்போது சில கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
அதன்படி இனி கோவில்களில் பக்தர்கள் மொபைல்போன்களை கொண்டு செல்லலாம். ஆனால் கோவில்களில் இருக்கும் வரை கண்டிப்பாக அவற்றை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
கோவிலில் சிலைகள், பூஜைகளை போட்டோ, வீடியோ எடுப்பது, செல்பி மற்றும் சமூக வலைதள பதிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை எச்சரித்தும் உள்ளது.
வாசகர் கருத்து (14)
bharathi - ,
13 அக்,2026 - 22:22 Report Abuse
hmm but already installed lockers money wasted 0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
13 அக்,2026 - 21:17 Report Abuse
எதற்கு தடை போடணும் பிறகு நீக்கணும்? அறிவு கெட்ட அரசு ஊழியர்களின் அய்யோக்கியத்தனத்தை வெளிக்காட்டாமல் இருக்க தடை போட்டான் பிறகு நீக்கினானுங்க 0
0
Reply
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
13 அக்,2026 - 21:08 Report Abuse
கோவில்களுக்கு மொபைல்போன் கொண்டு செல்லலாம்: கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி .நடப்பது முகம்மது பின் துக்ளக் ஆட்சி .இன்னும் சில வாரங்களில் நாத்திக திக பக்தர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க மொபைல் போன் கோவில்களுக்கு கொண்டு செல்ல தடை என்ற அறிவிப்பு வரலாம் . அதன் பின்பு ஸ்மார்ட் போன் அனுமதி கிடையாது ,பட்டன் போனுக்கு மட்டும் அனுமதி என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை .அந்தர் பல்டி அடித்து கரணம் போடும் ஆட்சியை நாமும் ரசிப்போம் .முகம்மது பின் துக்ளக் முகம்மது முன் துக்ளக் முகம்மது கீழ் துக்ளக் முகம்மது மேல் துக்ளக் ஆகிய அனைத்து கோமாளி ஆட்சிகளையும் ஒரே நேரத்தில் பார்க்கும் பாக்கியம் யாருக்கு கிட்டும் ? 0
0
Reply
Sivaagiri - ,இந்தியா
13 அக்,2026 - 21:01 Report Abuse
போட்டோ வீடியோ எடுத்தால் ஸ்பாட் :.பைன் ரூ பத்தாயிரம் , அபராதம் - மற்றும் போன்கள் பறிமுதல் - - என்று கோவில்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் . . . 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
13 அக்,2026 - 19:24 Report Abuse
ஒன்னு செய்யுங்க , எல்லா கோவிலுள்ளும் jammer வைத்து விடுங்க, 0
0
Reply
மாக்கான் - ,இந்தியா
13 அக்,2026 - 16:56 Report Abuse
ஏய்யா... இவனுங்க என்ன “முகமது பின் துக்ளக்” ஆட்சி நடத்துறான்களா...? மொபைல் எடுத்துட்டு போகக்கூடாதுன்னு இதே மந்திரி சொன்னான்... இப்ப.. கொண்டு செல்லலாம்ங்றான்...? என்ன எழவுய்யா இது...? மக்களை கேணயன்னு நினைச்சிட்டாங்களா...? இதுக்கு நீ ஒத்து ஊதுற....? 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
13 அக்,2026 - 16:46 Report Abuse
சர்ச், மசூதிகளுக்கும் இதே நிபந்தனை அமல் படுத்த padumaa??? 0
0
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
13 அக்,2026 - 19:24Report Abuse
சர்ச் இல் நாங்களாகவே பயன்படுத்துவது இல்லை 0
0
Reply
சந்துரு - ,
13 அக்,2026 - 16:30 Report Abuse
இதுதான் தற்குறிகள் ஆட்சிங்கிறது? இதற்கு பேசாமல் பருத்தி மூடை கொடேன்லேயே இருந்திருக்கலாமா? 0
0
Reply
Zi King - ,இந்தியா
13 அக்,2026 - 16:00 Report Abuse
Insta reels govt Policy change in the speed of reels.
All money spent on locker / computer / staff employed for mobile logistics in drain. 0
0
Reply
அப்பாவி - ,
13 அக்,2026 - 15:25 Report Abuse
பல்டி பல்டி கில்லி கில்லி.. இனிமே எல்லோரும் போயி செல்பி ரில்ஸ் எடுத்துக்கலாம். 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement