21 மூட்டை நாட்டு பட்டாசு பறிமுதல் திருநாவலுார் அருகே தம்பதி கைது

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே 21 மூட்டை நாட்டு பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, தம்பதியை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கோவிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சத்யா, 37; இவரது வீட்டில் நாட்டு பட்டாசு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 21 மூட்டை நாட்டு பட்டாசுகள், ஒரு மூட்டை வாண வெடிகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து சத்யா, செந்தில்குமார், 46; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி அரசால் சீல் வைக்கப்பட்ட நாட்டு பட்டாசு தயாரிக்கும் இடத்தில் பின் பக்க கதவைத் திறந்து பட்டாசு தயாரித்தது தெரியவந்துள்ளது.

Advertisement