பைக்குகள் திருட்டு
புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், ஆசூர், மேட்டு தெருவை சேர்ந்தவர் அய்யனார், 43; கொத்தனார். இவர் கட்டட மேஸ்திரியான சரவணன் என்பவரிடம் புதுச்சேரி, விக்டர் சிமோனல் வீதியல் பிரெஞ்சு பள்ளியில் கட்டட வேலை செய்து வந்தனர்.
கடந்த 3ம் தேதி காலை அருகில் உள்ள கடைக்கு மேஸ்திரியின் ஸ்கூட்டரை (பி.ஓய் 01 சி.எக்ஸ் 1577) எடுத்து சென்றுவிட்டு, மீண்டும் பிரெஞ்சு பள்ளி எதிரே வந்து நிறுத்தினார்.
பின், 11:00 மணிக்கு டீ குடிக்க வந்து ஸ்கூட்டரை பார்த்தபோது, காணவில்லை. புகாரின் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், வானுார் அடுத்த தென்னமூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 32; டூரிஸ்ட் டிராவல்ஸ் பஸ் டிரைவர். இவர் கடந்த 8ம் தேதி 3 நாள் சுற்றுலாவாக கொச்சின் செல்ல, தனது பைக்கை (பி.ஓய் 01 சி.டள்யூ. 2698) பிள்ளைசாவடியில் அவர் வேலை செய்யும் டிராவல்ஸ் நிறுவனம் எதிரே நிறுத்திவிட்டு சென்றார். கடந்த 10ம் தேதி திரும்ப வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சிறப்பு 'டெட்' தகுதி தேர்வில் 1.10 லட்சம் ஆசிரியர்கள் 'பெயில்'
-
வரி விவகாரத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்; ஜெய்சங்கர்
-
போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்
-
ஐரோப்பிய தலைவர்களுக்கு ஆன்லைன் டார்ச்சர்: எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி