காங்., கமிட்டி 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தலைவர்கள் தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி பிரதேசக் காங்., கமிட்டியின் 6 மாவட்டங்கள், 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் காங்., கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 6 மாவட்டங்களை, 12 மாவட்டங்களாகப் பிரித்து அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
அதன்படி, மண்ணாடிப்பட்டு, திருபுவனை தொகுதியை இணைத்து மண்ணாடிப்பட்டு மாவட்டம்; ஊசுடு, வில்லியனுார் தொகுதியை இணைத்து ஊசுடு மாவட்டம்; உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிகளை இணைத்து இந்திரா நகர் மாவட்டம்; தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை தொகுதிகளை இணைத்து லாஸ்பேட்டை மாவட்டம்; காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதிகளை இணைத்து முத்தியால்பேட்டை மாவட்டம்; உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு தொகுதிகளை இணைத்து உருளையன்பேட்டை மாவட்டம்; முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளை இணைத்து அரியாங்குப்பம் மாவட்டம்; மங்கலம், நெட்டப்பாக்கம் தொகுதிகளை இணைத்து நெட்டப்பாக்கம் மாவட்டம்; ஏம்பலம், பாகூர் தொகுதிகளை இணைத்து பாகூர் மாவட்டம் என பிரித்துள்ளனர்.
இதேபோல், நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால்(வடக்கு), காரைக்கால் (தெற்கு), நிரவி டி.ஆர்.பட்டினம் தொகுதிகளை இணைத்து காரைக்கால் மாவட்டம்; மற்றும் மாஹே மாவட்டம்; ஏனாம் மாவட்டம் என, 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
புதிய மாவட்டங்களுக்கு தலைவர்களை தேர்வு செய்வதற்காக அகில இந்திய காங்., பார்வையாளர் நாராயணசாமி தலைமையில் தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் இன்று (14ம் தேதி) முதல் நடத்தப்படவுள்ளன.
மேலும்
-
சிறப்பு 'டெட்' தகுதி தேர்வில் 1.10 லட்சம் ஆசிரியர்கள் 'பெயில்'
-
வரி விவகாரத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்; ஜெய்சங்கர்
-
போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்
-
ஐரோப்பிய தலைவர்களுக்கு ஆன்லைன் டார்ச்சர்: எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி