குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் செயல்படும் அனைத்து கடைகள், விடுதிகள், மருத்துவமனைகளில் கட்டாயம் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். தவறினால் அபராதம், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் நகரில் செயல்பட்டு வரும் உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள், தங்கும் விடுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது குப்பையை கட்டாயம் தரம் பிரித்து வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.

குறிப்பாக சாலையோரங்களில் செயல்படும் டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் தங்கள் கடைகளில் முன்புறத்தில் பொதுமக்களுக்கும் துாய்மை பணியாளர்களுக்கும் எளிதில் தெரியும்படி பச்சை, நீல தொட்டிகளில் வைத்து அதில் குப்பை ஒன்றுடன் ஒன்று கலக்காத வகையில் பராமரிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை பின்பற்றாத கடைகள், நிறுவனங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.––––

Advertisement