கவர்னர் அர்லேக்கரின் கடமை உணர்வு; இணையத்தில் வைரலாகும் வீடியோ

11

சென்னை: கேரள அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருவனந்தபுரத்திலிருந்து வந்தே பாரத் ரயிலில் கவர்னர் அர்லேக்கர் பாலக்காடு பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக கவர்னராக பணியாற்றிய ஆர்.என்.ரவி, கடந்த மார்ச்சில், மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக் கருக்கு, தமிழக கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரள கவர்னர் பொறுப்பில் இருந்து அர்லேக்கரை நேற்று விடுவித்த ஜனாதிபதி முர்மு, தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமித்து உத்தரவிட்டார்.

புதிய பொறுப்பு குறித்த அறிவிப்பு வெளியான போதிலும், கேரள ஆளுநராக முன்னரே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து வந்தே பாரத் ரயிலில் பாலக்காடு சென்றார். புதிய பொறுப்புக்குச் செல்லும் சூழலிலும், தனது முந்தைய கடமைகளைச் சரியாக நிறைவேற்ற அவர் செய்த செயல், சமூக சமூக வலைதளத்தில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது

Advertisement