சவுதியில் உள்ள மகளின் நிலை என்ன? புதுச்சேரியில் உறவினர்கள் கதறல்
புதுச்சேரி: சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றும் மகளின் நிலை தெரியாமல், புதுச்சேரியில் உறவினர்கள் கதறி வருகின்றனர்.
சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், 13 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த இடம் அருகில் சவுதியின் பிரபலமான ஜெர்மன் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரி காராமணிகுப்பத்தை சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகள் ஆயிஷா நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலையில், விமான நிலைய தாக்குதல் நடந்தபோது, அதிகாலை 3 மணி வரை ஆயிஷா பதட்டத்துடன் தனது பெற்றோரிடம் பேசி உள்ளார்.
அதன் பிறகு அவரது மொபைல் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின் ஆயிஷாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் பணிபுரியும் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இருவரும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய துாதரகத்தில் பாதுகாப்புடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் ஆயிஷா, அவருடன் பணியாற்றிய மற்றொரு பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியாததால், புதுச்சேரி மற்றும் கடலுாரில் உள்ள உறவினர்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்