மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று, மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ள மாணவிக்குப் பாராட்டு விழா நடந்தது.
விழாவில், நலப்பணி சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஆலோசகர் ஆசிரியர் தனராஜா வரவேற்றார். துணைத் தலைவர்கள் விஜயலட்சுமி, காவலர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல அமைப்பாளர் ரமேஷ், ஆனந்தன், முரசொலிமாறன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ள மாணவி ரித்திகாவுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்.
மேலும், புதுச்சேரி நலப்பணிச் சங்க மாணவர்கள் அமைப்பினர் மருந்தாளுநர் கல்லுாரி மாணவி இசைமொழி, ஆசிரியை குழலி, மேனிலைப் பள்ளி மாணவிகள் பவித்ரா, மாதவி ஆகியோரைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்.
மண்டல அமைப்பாளர் ரவி நன்றி கூறினார்.