வழுக்கி விழுந்த மூதாட்டி பலி
புதுச்சேரி: லாஸ்பேட்டை, அசோக் நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்த சுப்ரமணியன், 81. இவரது மனைவி சரோஜா, 72; உடல்நல குறைவு காரணமாக அடிக்கடி வலிப்பு வந்து கீழே விழுந்து விடுவார்.
இந்நிலையில், நேற்று 11:15 மணிக்கு பாத்ரூம் சென்றபோது, திடீரென வழுக்கி கீழே விழுந்து காயமடைந்தார்.இதையடுத்து, சுப்ரமணியன், மனைவி சரோஜாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனை அழைத்து சென்றார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement