ஊர்வலம் நடத்துவது தேசதுரோக செயலா? ஆர்எஸ்எஸ் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகம் முழுதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க உத்தரவிடக்கோரி அந்த அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி லட்சுமி நாராயணன், தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். அவர்கள் கூறியதாவது; பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்கப்படுகிறது. தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்? தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒவ்வொரு முறையும் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நீதிமன்றத்தையே நாட வேண்டியுள்ளது. இது ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி, வேறு எந்தக் கட்சியோ, அமைப்போவாக இருந்தாலும், ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
திருவிழா சமயங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதியே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அருசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, "ஊர்வலம் நடத்துவது தேசவிரோத செயலா? ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பது தேவையற்ற வழக்குகளுக்கும், போலீசார் மீதான எதிர்மறை விளம்பரத்திற்கும் வழிவகுக்கும்," என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ், அரசு தரப்பினர் கலந்து பேசி சுமூக தீர்வு காணுமாறு நீதிபதி லட்சுமி நாராயணன் அறிவுறுத்தினார். இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்
-
மார்ச் 3ல் துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு; அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து