வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

5

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த தோழி சாந்தி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பதிவான போக்சோ வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

வீரமணி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

'வீரமணி மீதான வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன?,' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, வழக்கு தாக்கல் செய்த பிறகு தான் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement