பூட்டி கிடக்கும் அலுவலகம்: அதிருப்தியில் உள்ளூர் மக்கள்

கூடலுார்:கூடலூர் தொரப்பள்ளியில் வி.ஏ.ஓ., அலுவலகம் பராமரிப்பின்றி பூட்டி கிடப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலூர், தொரப்பள்ளி மக்கள் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வசதியாக, 2003ல் தொரப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டது. இதனை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

துவக்கத்தில், முறையாக செயல்பட்ட அலுவலகம், சில ஆண்டுகளில் பயன்படுத்தாமல் மூடப்பட்டது.

அப்பகுதி மக்கள், வருவாய் துறை தொடர்பான பணிகளை மேற்கொள்ள, 6 கி.மீ., பஸ் அல்லது ஆட்டோவில் பயணித்து கூடலூர் வந்து வி.எ.ஒ., சந்தித்து வருகின்றனர்.

தொடர்ந்து, பராமரிப்பின்றி உள்ள, வி.எ.ஓ., அலுவலக கட்டடத்தின் முன் பகுதில் ஏராளமான காலி மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இதனையும் அகற்ற நடவடிக்கை இல்லை. மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொரப்பள்ளி, மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை தவிர்க்க, இங்குள்ள வி.எ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைத்து அல்லது புதிய கட்டடம் கட்டி, செயல் பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement