குன்னுார் சிம்ஸ் பூங்கா :வசீகரிக்கும் வண்ண மலர்கள்

குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனை முன்னிட்டு, நடவு செய்யப்பட்ட வண்ண மலர்கள் தற்போது பூத்து குலுங்குகிறது.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு,2.50 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. அதில், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை தாயகமாக கொண்ட, ‘பால்சம், பெகோனியா, பேன்சி ஜின்னியா, பிளாக்ஸ், காஸ்மாஸ், டெல்பினியம்,’ உட்பட, 75க்கும் மேற்பட்ட ரக மலர்கள் வண்ண மயமாக பூத்து குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கின்றன. ரோஜா வகைகள், டேலியா, சால்வியா போன்ற மலர்கள் பூங்கா முகப்பு பகுதியில் வண்ணமயமாக பூத்துள்ளன.

வரும் வாரங்களில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை மற்றும், 2வது சீசனில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தோட்டக்கலை துறையினர் பூங்காவில் பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement