அரசு மருத்துவமனையில் 10 பேருக்கு காது, மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை முதுகுளத்துார் டாக்டர்கள் சாதனை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு மாதத்தில் காது,மூக்கு,தொண்டை பிரிவில் 10 அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் காது,மூக்கு தொண்டை அறுவை சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில், இங்கு கடந்த மே மாதத்தில் காது,மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.
இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மருத்துவமனையில் இல்லாத நிலையிலும் வெளி மருத்துவமனையில் இருந்து உபகரணங்கள் பெற்று, காது சீழ் வடிதல் 6 நோயாளிக்கும், எண்டோஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை 4 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்து சாதித்துள்ளனர்.
முதல்முறையாக 10பேருக்கு காது,மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை செய்துள்ள டாக்டர் சுடர்மதி, மயக்கவியல் டாக்டர் யோகாம்பிகை ஆகியோரை நோயாளிகள்,மக்கள் பலரும் பாராட்டினர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக அறுவை சிகிச்சை உபகரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு