மாமியாரை கொன்ற வழக்கில் தலைமறைவானவர் கைது
நெகமம்: நெகமம், கக்கடவு பகுதியில் மாமியாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாவ தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 27, கட்டட தொழிலாளி. இவர், நெகமம் அருகே உள்ள கக்கடவில் மனைவி அனிதா வீட்டில் வசிக்கிறார். இவர், மது போதையில் வீட்டிற்கு வருவதை கண்டித்த, மாமியார் ராஜேஸ்வரி, 55, கத்தியால் குத்தினார். தடுக்க சென்ற, மனைவி, 5 வயது மகளையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. நேற்று நெகமம் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்ட போது, மாயாண்டீஸ்வரர் கோவில் அருகே ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.