கட்டடம் கட்டியாச்சு திறப்பு என்னாச்சு
சோழவந்தான்: சோழவந்தான் பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
சோழவந்தான் வார்டு கவுன்சிலரின் கோரிக்கையின் பேரில் அரசுப்பள்ளி அருகே எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14.30 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது. கட்டி பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் சமூக விரோதிகள் மது அருந்தவும், தெருநாய்களின் வசிப்பிடமாகவும் பயன்படுகிறது.
மேலும் கட்டடம் பராமரிப்பின்றி பாழடைவதுடன் அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது. பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement