ஒவ்வொருக்கும் தேசநலன் முக்கியம்: விட்டல் தாஸ் மகராஜ்
தஞ்சாவூர்: ‘‘தேசத்தைத் தாழ்த்திச் சீர்குலைக்க, சிலர் வெளிநாட்டினரிடம் விலைபோகியுள்ளது வேதனையானது.ஒவ்வொருவரும் தேச நலனை முதன்மையாகக் கருத வேண்டும்,’’ என, விட்டல்தாஸ் மகராஜ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், விட்டல் ருக்மிணி சமஸ்தானத்தில், நவராத்திரி மகோத்சவ விழாவில், சமஸ்தான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் பேசியதாவது:
நவராத்திரி விழா கொண்டாடும் சூழ்நிலையில், தேசத்திற்கு அம்பாளின் அனுக்கிரகம் மிகவும் அவசியமாகிறது.
கண்ணுக்குத் தெரிந்த எதிரியை விட, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும், அவர்களின் சதித் திட்டங்களையும் முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் நமது தேசம் உள்ளது. தேச நலனே, ராஜ்ய நிர்வாகத்தின் தார்மீகப் பொறுப்பாகும்.
நம் நாட்டிற்கு எதிராக, வெளிநாடுகளின் கைக்கூலியாகச் செயல்படும் துரோகிகளை மன்னிக்கக் கூடாது. இத்தகைய தேச விரோதிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும். யார் ஆட்சியில் இருந்தாலும், அதுகுறித்துச் சிந்திக்காமல், பாரபட்சமில்லாமல், தேசம்தான் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
தேசத்தைத் தாழ்த்திச் சீர்குலைக்க, சிலர் வெளிநாட்டினரிடம் விலைபோகியுள்ளது வேதனையானது. பிரதமர் நரேந்திர மோடி, நவராத்திரியின் பெருமைகளைப் பேசியுள்ளார். இப்படி ஒரு பிரதமர் நமக்குக் கிடைத்திருப்பது பெருமையானது. அவரை மகாத்மா நரேந்திர மோடி என்று அழைக்கலாம். எனவே, எதிர்க்கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச நலனுக்கு ஒற்றுமையாகத் துணை நிற்க வேண்டும்.
அம்பாள் நம்மையும், நாட்டையும் காக்கும் பொருட்டு, 10 சகஸ்ர சண்டி ஹோமம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மந்திரத்தின் மகத்துவம் நம்மைக் காக்கும். சகஸ்ர சண்டி மூலம் தேசத்திற்கான ஆபத்தைத் தடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் நமது தேசத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அவரவர் தேவதைகளை உபாசனை செய்து, மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்வது அவசியம். ஒவ்வொருவரும் தேச நலனை முதன்மையாகக் கருத வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் மற்றும் அவரின் கூட்டாளிகள் கண்ணுக்குத்தெரிந்த எதிரியா அல்லது கண்ணுக்குத்தெரியாத எதிரியா? ஆனால் ஒட்டுமொத்தத்தில் அவர்கள் இந்திய நாட்டின் எதிரிகள். அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்கவேண்டும், அல்லது பாக்கிஸ்தான் போன்ற அவர்கள் ஆதரவு நாடுகளுக்கு துரத்தவேண்டும்.மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு