வெளிநாட்டு ஊழியர்கள் வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம்: பணி அனுமதி நீட்டிப்பை அமெரிக்கா ரத்து செய்தது
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர், எச்1பி விசாவில் வருபவரின் கணவர் அல்லது மனைவி, அடைக்கலம் கேட்டு வருவோருக்கு, தற்காலிகமாக வேலை செய்ய, பணி அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதற்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் காலம், 540 நாட்களாக இருந்தது. அதன்பிறகும் அனுமதி வழங்காவிட்டால், தானாகவே அனுமதி வழங்கியதாக கருதப்படும்.
இந்த நடைமுறை முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது, வெளிநாட்டினர் வேலை இழப்பதை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது.
தற்போது புதிய விதியின்படி, பணி அனுமதிக்கான ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக கையில் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாது.
கடந்த ஆண்டில், தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட இந்த மாற்றம், தற்போது பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துகளுக்குப் பின் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 30க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கு இந்த விதி பொருந்தும்.
அமெரிக்காவுல குடியேற ஆசைப்படுவர்களே.. ஒடியாங்க.. தாய்நாட்டுக்கு வேலை செய்ங்க..
விண்ணப்பித்து 540 நாட்கள் காத்திரு என்பது ஒருவரை வேலை செய்யக்கூடாது, திரும்பிப்போ என்று சொல்வதும் ஒன்றுதான். இதுதான் அடைக்கலம் தேடி வருவோரின் நிலை.. இதனால் ஈரான், சிரியா போன்ற நாடுகளில் இருந்து வருவோர்தான்.
Nice Work President Trump! Stop Alien invades.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பெரியோர்கள் சொல்வார்கள். கடன் என்றால், 'கடனே என்று செய்தேன்', 'கடனிழவே என்று செய்தேன்' என்றெல்லாம் சொல்லுகிறோமே, அந்த மாதிரி வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை, டூட்டி. அதை அன்போடு, ஆர்வத்தோடு ஹ்ருதய பூர்வமாகச் செய்ய வேண்டும். ட்ரம்ப் தன் கடமையை - மக்களை துன்புறுத்துவது - சிறப்பாக செய்கிறார். ட்ரம்ப் கடங்காரன் என்றைக்கு ஒழிவானோ... இறைவா?
உங்க கருத்து AI மூலமாக ட்ரம்ப் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்… அடுத்த தடவை அமெரிக்க ஏர்போர்ட்டில் எமிக்ரேஷனில் வரிசையில் நிற்கும்போது டயப்பர் கட்டிக்கோங்கமேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு