இயற்பியல் துறை சார்பில் சிறப்பு பயிற்சி பட்டறை

தர்மபுரி: தர்மபுரி அருகே பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பாக, 'பொது பேச்சுத் திறன்' என்ற தலைப்பில் ஒருநாள் சிறப்புப் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. இதில், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் வரவேற்றார். ஆராய்ச்சி மைய பொறுப்பு இயக்குனர் செல்வபாண்டியன் தலைமை வகித்த பேசினார்.

இந்த அமர்வுகள் மாணவர்களின் மேடை அச்சத்தை போக்குதல், உடல் மொழியைக் கையாளுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை உருவாக்குதல் மற்றும் பார்வையாளர்களை கவரும் உத்திகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முதுகலை மாணவி மலர்விழி மற்றும் சென்னம்மாள் தொகுத்து வழங்கினார். இதில் அனைத்து முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement