டெங்கு விழிப்புணர்வு பேரணி

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சார்பில் நடைபெற்ற, டெங்கு விழிப்புணர்வு பேரணியை மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பள்ளி மாணவ, மாணவியர், டி.பி.சி., பணியாளர்கள் என, 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி கருங்கல்பாளையத்தில் துவங்கி, ராமமூர்த்தி நகர், ஜீவா நகர் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று, கிருஷ்ணம்பாளையத்தில் நிறைவடைந்தது.
பேரணியின்போது, டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது, காய்ச்சல் பாதிப்பு கண்டறிவது, சுற்றுபுறத்தை துாய்மையாக பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement