சுகாதார ஆய்வாளர் எனக்கூறி கைவரிசை காட்டியவர் கைது
கோபி:கோபியில் இரு மளிகை கடைகளில், சுகாதார ஆய்வாளர் எனக்கூறி, கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே கே.என்.பாளையம், பங்களாப்புதுாரில்
உள்ள மளிகை கடைகளில், பாலிதீன் காகிதங்களை விற்பனை செய்யக்கூடாது,
தான் ஒரு சுகாதார ஆய்வாளர் எனக்கூறி, கடைக்காரர்கள் அசந்திருந்த
சமயத்தில், அந்த மர்ம நபர், 5,000 ரூபாய் களவாடி சென்றதாக,
பங்களாப்புதுார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இந்நிலையில்
புஞ்சை துறையம்பாளையம் பகுதியில், போலீசார் நேற்று வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தபோது, சுசூகி ஏக்சஸ் என்ற ஸ்கூட்டரில் போதையில் வந்த
நபரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர், கோவை அருகே குட்டை பீளமேட்டை சேர்ந்த சுரேஷ்குமார், 31,
என்பதும், சுகாதார ஆய்வாளர் எனக்கூறி, இரு கடைகளில் கைவரிசை
காட்டியிருப்பது தெரியவந்தது. இதனால் அவரை பங்களாப்புதுார்
போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த, 5,000 ரூபாய், ஸ்கூட்டரை
பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு