ஐநாவின் இரட்டை நிலைப்பாடு சர்வதேச பன்முகத்தன்மையை நசுக்கும்; எச்சரிக்கும் இந்தியா
நியூயார்க்: நியூயார்க்கில் ஐ.நா பொதுச் சபையின் 3வது குழுக் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் முதல் செயலாளர் அனுஜ் ஸ்வரூப் பங்கேற்றார்.
அதில், அவர் பேசியதாவது; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கைபர் பக்துன்க்வா பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்குள்ள மக்களுக்கு முழு உரிமைகளையும் வழங்கியுள்ளது.
ஐநா வலியுறுத்தியது போல, ஜேஏஏசி தலைவர்கள் கைது, தேர்தலுக்கு முன்னதாக நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும். இணையதளத் தடைகளை விலக்கி மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்.
மேற்கத்திய நாடுகளின் போராட்டங்கள் ஒடுக்கப்படும் போது மௌனம் காக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையம், இந்தியா போன்ற நாடுகளின் விவகாரத்தில் மட்டும் தலையிடுவது ஏன்? இந்த இரட்டை நிலைப்பாடுகள் சர்வதேச பன்முகத்தன்மையின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடும். இவ்வாறு கூறினார்.
வல்லரசு நாடுகளை தட்டி கேட்க முடியாத இரட்டை நிலைப்பாடு கொண்ட கைய்யலாகாத ஐ நா சபை எதற்கு?மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு