கவர்னராக அர்லேக்கர் பொறுப்பேற்றார்: முதல்வர் வாழ்த்து
சென்னை:
கவர்னராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் மாதம், மேற்கு வங்க கவர்னராக மாற்றப்பட்டார். கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேக்கருக்கு, தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
கேரள கவர்னர் பொறுப்பில் இருந்து ராஜேந்திர அர்லேக்கர் விடுவிக்கப்பட்டு, தமிழக கவர்னராக முழு நேர பொறுப்பு வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, நேற்று இரவு சென்னை வந்த ராஜேந்திர அர்லேக்கரை, சென்னை விமான நிலையத்தில், அமைச்சர் ஸ்ரீநாத் வரவேற்றார்.
தமிழக கவர்னராக ராஜேந்திர அர்லேக்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கவர்னர் மாளிகையில் நடந்த காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை, அவர் ஏற்றுக்கொண்டார்.
முதல்வர் விஜய் மாலை நேரில் சென்று, கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் விஜய்க்கு, நடராஜர் சிலையை பரிசாக வழங்கி, கவர்னர் நன்றி தெரிவித்தார். பின்னர், இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு