விண்வெளி தொழில் கொள்கை 2025 சிறுதொழில் முதல் ஸ்டார்ட் அப் வரை விண்வெளிதுறையில் வாய்ப்பு

ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பு மட்டுமல்ல; அவற்றுக்கான உதிரிபாகங்கள், மின்னணு சாதனங்கள், மென்பொருள், சோதனை சேவைகளிலும் தொழில் வாய்ப்புகள் உள்ளன.

அரசின் இலக்கு என்ன?





*ஐந்து ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது.

*நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவது.

*விண்வெளி உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையங்களை மேம்படுத்துவது.

என்னென்ன தொழில்கள் செய்யலாம்?





*செயற்கைக்கோள்கள், ராக்கெட் ஏவுதள உபகரணங்கள் தயாரித்தல்.

*இயந்திர உதிரிபாகங்கள், மின் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி.

*செயற்கைக்கோள் கண்காணிப்பு, தரைக்கட்டுப்பாட்டு சாதனங்கள் தயாரித்தல்.

*பொறியியல் வடிவமைப்பு, மென்பொருள், சோதனை, ஆராய்ச்சி சேவைகள்.

*செயற்கைக்கோள் தரவு, தொலையுணர்வு மற்றும் பராமரிப்பு சேவைகள்.

சிறு தொழில்களுக்கு என்ன வாய்ப்பு?





*பெரிய விண்வெளி நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கலாம்.

*துல்லிய பொறியியல், மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

*தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இஸ்ரோவின் தேவைகளை பூர்த்தி செய்வதாக கொள்கை தெரிவிக்கிறது.

*தேவையான தரச்சான்றுகள், தொழில்நுட்ப நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஸ்டார்ட்அப்களுக்கு என்ன உதவி?





*விண்வெளி புத்தொழில் நிறுவனங்களுக்காக 10 கோடி ரூபாய் நிதி அறிவிப்பு.

*இந்த நிதியை 'ஸ்டார்ட்அப் டி.என்.' நிர்வகிக்கும் என கொள்கை தெரிவிக்கிறது.

*'டான்சீட்', வளர்ந்து வரும் துறைகளுக்கான விதை நிதியிலும் வாய்ப்பு உள்ளது.

*நிதி உதவிகளுக்கு தனித்தனி தகுதி, தேர்வு நிபந்தனைகள் பொருந்தும்.

சேவை நிறுவனங்களுக்கு என்ன உதவி?





*விண்வெளி ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் உலகளாவிய திறன் மையங்களுக்கு சம்பள ஊக்கத்தொகை.

*நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25 வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

*தமிழக பணியாளர்களின் சம்பளத்தில் முதல் ஆண்டு 30 சதவீதம், இரண்டாம் ஆண்டு 20 சதவீதம், மூன்றாம் ஆண்டு 10 சதவீதம் ஊக்கத்தொகை.

*ஒரு பணியாளருக்கு மாதம் அதிகபட்சம் 20,000 ரூபாய்.

யாருக்கு சலுகை கிடைக்கும்?





*உற்பத்தி முதலீட்டு சலுகைகளுக்கு குறைந்தபட்சம் 25 கோடி ரூபாய் முதலீடு தேவை.

*குறைந்தபட்சம் 25 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

*25 முதல் 300 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு குறிப்பிட்ட மானியங்கள் உண்டு.

*300 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகளுக்கு சிறப்பு ஊக்க சலுகை தொகுப்பு உண்டு.

*ஸ்டார்ட்அப், சேவை நிறுவனங்களுக்கு தனி தகுதிகள் பொருந்தும்.

என்னென்ன மானியங்கள்?





*தகுதியான நிலையான முதலீட்டில் 20 சதவீதம்; நிபந்தனைகளை நிறைவேற்றிய பின் 10 ஆண்டுகளில் வழங்கப்படும்.

*அரசு தொழிற்பூங்காக்களில் மாவட்ட வகைக்கு ஏற்ப 20 அல்லது 50 சதவீத நில விலை சலுகை.

*வணிக உற்பத்தி தொடங்கியதில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முழு விலக்கு.

*தமிழக தொழில்நுட்ப பணியாளருக்கு மாதம் 10,000 ரூபாய் வீதம் 12 மாதங்கள் பயிற்சி ஊக்கத்தொகை. தரச்சான்று, காப்புரிமை செலவில் 50 சதவீத உதவி.

எந்த மாவட்டத்தில் அதிக சலுகை?





ஏ பிரிவு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்.

பி பிரிவு: கோவை, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்கள்.

சி பிரிவு: மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 22 மாவட்டங்கள்.

அரசு தொழிற்பூங்காக்களில் ஏ, பி பிரிவுக்கு 20 சதவீதமும், சி பிரிவுக்கு 50 சதவீதமும் நில விலை சலுகை.

நில விலை மானியத்துக்கு தகுதியான நிலையான முதலீட்டில் 20 சதவீத உச்சவரம்பு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?





முதலீட்டு திட்டங்களுக்கு 'கைடன்ஸ் தமிழ்நாடு', 'டிட்கோ'வை அணுகலாம்.

தொழில் அனுமதி, உரிமங்களுக்கு தமிழக ஒற்றை சாளர இணையதளத்தை பயன்படுத்தலாம்.

அரசு பரிசீலித்து அனுமதிக்கும் ஊக்கத்தொகைகளை 'சிப்காட்' வழங்கும்.

கொள்கையின் காலவரம்பு என்ன?





ஐந்து ஆண்டுகள் அல்லது புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை செல்லுபடியாகும்.

நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் சலுகை உண்டு.

முதலீட்டுக்கு முன் தற்போதைய விண்ணப்ப நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

investingintamilnadu.com

| tidco.com

ஆதாரம்: தமிழக அரசு — விண்வெளி தொழில் கொள்கை 2025.

Advertisement