கபடி கழகம் திருப்பூர் கபடி அணி தங்கம் வெல்லும்! ஜெயசித்ரா சண்முகம் பெருமிதம்
(ஜெய்சித்ரா சண்முகம் படம் சேர்க்க வேண்டும்)
ஆடை உற்பத்தியில் உலகளவில் முத்திரை பதித்து வரும் திருப்பூர் தொழில் நகரம், விளையாட்டுத் துறையிலும், குறிப்பாக கபடி விளையாட்டிலும் புதிய சிகரங்களை தொட்டு வருகிறது. அதிகமான அணிகள், திரளான வீரர்கள், உற்சாகமான பார்வையாளர்கள் என திருப்பூரின் இளம் தலைமுறையினரின் முதன்மை தேர்வாக கபடி விளையாட்டு வேகமாக முன்னேறி வருகிறது.
இது குறித்து, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் கூறியதாவது:
ஆண்டுதோறும் திருப்பூரில் கபடி அணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 14 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வயதினர், கபடி போட்டிகளில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு தனிப்பாதை இருந்தாலும், கபடியை பொறுத்தவரை, திருப்பூரில், தனக்கென வலுவான ஒரு களத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளது.
‘மேட்’ அவசியம்!
திருப்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வீரர்களுக்கு வழங்கவும் நவீன ‘மேட்’ வசதி மிக அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. விளையாட்டோடு மட்டுமின்றி, கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்கும் திருப்பூர் கபடி சங்கம் மற்றும் தொழிலதிபர்கள் சார்பில் தாராளமாக நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜெய்பாவாய் உயர்நிலைப் பள்ளி கபடி சங்கம் மற்றும் நண்பர்கள் சார்பில், தொழிலதிபர்களின் தாராள கொடையில், 8 லட்சம ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நிப்ட்–டீ கல்லுாரியில், ஒற்றைப் பெற்றோர் அல்லது பெற்றோர் இல்லாத ,40 முதல் ஆண்டு மாணவர்களின், 50 சதவீத கல்வி கட்டணத்திற்காக, 14 லட்சம் ரூபாய் வழங்கி ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
கலெக்டரின் திருப்பூர் வளர்ச்சி நிதிக்காக, ஜெயசித்ரா நிறுவனம் சார்பில், 5 லட்சம், ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில், 2 லட்சம் ரூபாய் என, மொத்தம், 7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கபடிப் போட்டியின் போது காயமடையும் வீரர், வீராங்கனைகளுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில், திருப்பூர் உட்படப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காயமடைந்த கபடி வீரர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சைகள் வழங்கி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் நலனில் அக்கறை கொண்டு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வரும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அதன் தலைவர் சோலை ராஜாவுக்கும் கபடி அமைப்புகள் சார்பில் நன்றி.
கோவையில் காயமடைந்த பெண் விளையாட்டு வீரர் ஒருவருக்கு மாவட்ட சங்கம் சார்பில், 1.80 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற பலருக்கும் மருத்துவ சிகிச்சை உதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
தமிழக அரசில், ஏராளமான துறைகள் உள்ள நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களுக்குக் வேலைவாய்ப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையிலேயே அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை விரிவுபடுத்தி, அரசின் அனைத்துத் துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இந்த கோரிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். கபடி விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு தேவையான உதவிகளை செய்ய கபடி கழகம் தயராக உள்ளது; ஆனால், கபடி விளையாட்டில் ஆர்வமுடன் விளையாடி, திறமையை வெளிக்கொணர வேண்டும். அவர்களின் சிறப்பான எதிர்காலம் ஏற்படுத்த திருப்பூர் கபடி கழகம் தயாராக உள்ளது.block_B
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு