SNQS உயர்தர பின்னலாடை – ஷாக்ஸ் ஏற்றுமதி எஸ்.என்.க்யூ.எஸ்., இன்டர்நேஷனல் முன்னோடி

வெளிநாட்டு மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், அந்தந்த நாடுகளிலேயே பேஷன் டிசைன் செய்து, பின்னலாடைகளை வழங்கி வருகிறது. பின்னலாடை, ஷாக்ஸ் என, வாரந்தோளும், 15 லட்சம் பீஸ்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக வளர்ச்சிகண்டுள்ளது, எஸ்.என்.க்யூ.எஸ்., இன்டர்நேஷனல்!

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர், திருப்பூர் தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் செயற்குழு உறுப்பினர் எனு, பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி வருகிறார், எஸ்.என்.க்யூ.எஸ்., இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் இளங்கோவன்.

உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை திறந்து, அந்தந்த நாடுகளில் உள்ள மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், அந்நாட்டிலேயே பேஷன் டிசைன் செய்து பிரமிப்பான வகையில், ஆடைகளை சப்ளை செய்து வருகின்றனர். வளர்ந்த நாடுகளை சேர்ந்த மக்கள், ‘ஓகே டெக்ஸ்’, ஆர்கானிக் டெக்ஸ்டைல், ‘ஸ்மெட்டா, உள்ளிட்ட தரச்சான்றுகளை பெற்ற நிறுவனமாக, எஸ்.என்.க்யூ.எஸ்., திகழ்கிறது.

அதிகபட்சமாக, 70 சதவீதம் பெண் தொழிலாளர்களின் வாழ்தாரமாக இயங்கி வழிநடத்தி வருகிறது. எஸ்.என்.க்யூ.எஸ்., நிறுவனம், 37 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஏற்றுமதி வர்த்தக முகமை சேவை, ஆடை உற்பத்தி, ஷாக்ஸ் உற்பத்தி என, பன்முக திறமையுடன், இன்று உலக நாடுகள் முழுவதும் கால் பதித்துள்ளது.

உலக அளவில், 120 இடங்களில் இந்நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. திருப்பூர், சென்னை, டில்லி மற்றும் வங்கதேசம், எகிப்து நாடுகளிலும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நாட்டு மக்களின் ஆடை தேர்வும், எதிர்பார்ப்பும் வேறுபட்டதாக இருக்கிறது. அதற்காகவே, அந்தந்த நாடுகளிலேயே அலுவலகம் திறந்து, பேஷன் டிசைன் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் உற்பத்தி செய்து, வழங்கி வருகின்றனர்.

வர்த்தகர்களுக்கு ஆடை உற்பத்தி செய்வதில், எதிர்பார்த்த டிசைன்களில் ஆடை வழங்க வேண்டிய முக்கியம். எப்படியெல்லாம் டிசைன் செய்யலாம் என, வாடிக்கையாளரிடம் கேட்டு, அதற்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனர். அதற்காக, லண்டன், ஸ்பெயின் போன்ற பகுதியில் டிசைன் ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது.அயர்லாந்து, அமெரிக்காவில் மார்க்கெட்டிங் அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது.

எஸ்.என்.க்யூ.எஸ்., நிறுவன வளர்ச்சிக்காக, நிர்வாக இயக்குனர் இளங்கோவன், இணை நிர்வாக இயக்குனர் சதீஷ் கிருஷ்ணா ஆகியோர் திருப்பூரிலும், மற்றொரு இணை நிர்வாக இயக்குனர் ஜெய்கிருஷ்ணா துபாயில் இருந்தும் நிர்வாக பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். வெளிநாட்டு மக்களின் எதிர்பார்ப்பை அறிந்த, அதே நாட்டு தொழில் வல்லுனர்களை கொண்டு, ஆடை வடிவமைக்கிறோம். உலகம் முழுவதும் வாடிக்கையாளர் இருப்பதால், பின்னலாடை மற்றும் ஷாக்ஸ் என வாரந்தோறும், 15 லட்சம் பீஸ்கள் ஏற்றுமதி செய்து வருகிறோம். கரூரில் இருந்து, வீட்டு உபயோக ஜவுளி பொருட்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.

@block_B@

ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி



லட்சிய இலக்கு நெருங்கி வருகிறது

எஸ்.என்.க்யூ.எஸ்., இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ளதால், பிரிட்டனுடன் புதிய வர்த்தக வாய்ப்பு திருப்பூருக்கு பிரகாசமாக மாறியுள்ளது. விரைவில், ஐரோப்பிய ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரும் போது, 27 நாடுகளுடன் விரிவான வர்த்தகம் செய்யும் வாய்ப்பு மலரும். திருப்பூரில் இருந்து ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் நடந்து வருவதால், வரிச்சலுகை கிடைக்கும் போது பல மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

போர்ச்சூழல் ஏற்பட்டதால், சிலவகை மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததால், ஜவுளித்தொழிலில் சவால் ஏற்பட்டுள்ளது. விரைவில், அந்நிலை மாறி இயல்புநிலை திரும்பும். புதிய தடையற்ற வர்த்த ஒப்பந்தங்களால், ஒவ்வொரு நிறுவனமும் புதிய வர்த்தக உறவை உருவாக்க முயற்சிக்க வேண்டும். புதிய சந்தைகளில் கால்பதிக்க வேண்டும்.

கன்டெய்னர் பிரச்னை அவ்வப்போது சவாலாக மாறுவதால், மத்திய அரசு, கன்டெய்னர் உற்பத்தியை விரைவில் துவக்க வேண்டும். அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு, திருப்பூர் தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு வாயிலாகவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வாயிலாகவும், ஒட்டுமொத்த பின்னலாடை தொழில்துறையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறோம். எங்களது இலக்கான, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியை, வெகுவிரைவில் அடைவோம்! அதற்கு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கிய காரணிகளாக இருக்கும். சர்வதேச சந்தைகளில், திருப்பூருக்கென நிரந்தரமான இடத்தை உருவாக்குவோம்!block_B

Advertisement