நவீன மருத்துவத்தின் புதிய முகவரி ஸ்ரீ சரண் மருத்துவமனை :திருப்பூர் மக்களின் நம்பிக்கையில் புதிய பரிணாமம்
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு தரமான, நவீன மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது ஸ்ரீ சரண் மருத்துவமனை. மருத்துவத் துறையின் புதிய முன்னேற்றங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து இணைத்து, தனது சேவையை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஸ்ரீ சரண் மருத்துவமனை, காலத்தின் தேவைக்கேற்ப தனது மருத்துவக் கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான பல்வேறு சிறப்பு மருத்துவச் சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதய சிகிச்சையில் புதிய முன்னேற்றம்:
மருத்துவமனையின் முக்கியமான புதிய சேவையாக நவீன கேத் லேப் துவங்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக இதய நோய்களுக்கான பரிசோதனைகள், அவசர சிகிச்சைகள் மற்றும் தேவையான Interventional Cardiology சிகிச்சைகள் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படுகின்றன. Full-time In-house Cardiologist சேவையுடன், அவசர நேரங்களிலும் இதய நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் முழு நேர நரம்பியல் சேவையும் வழங்கப்படுவதால், பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் அவசர நிலைகளுக்கு தாமதமின்றி சிறப்பு மருத்துவ ஆலோசனையும் அவசர சிகிச்சையும் கிடைக்கிறது.
24 மணி நேர ஒருங்கிணைந்த வசதி:
அவசர மருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், Emergency & Critical Care Unit, Neuro ICU, HDU மற்றும் Dedicated Isolation ICU உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. நவீன ஆபரேஷன் தியேட்டர்கள் வாயிலாக பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அவசரநிலையில் நோயாளியின் பொன்னான நேரத்தை வீணாக்காமல், உடனடி பரிசோதனை, மருத்துவ ஆலோசனை மற்றும் தேவையான சிகிச்சையை ஒருங்கிணைத்து வழங்குவதே மருத்துவமனையின் முக்கிய நோக்கமாக உள்ளது.
பல்துறை சிறப்பு மருத்துவச் சேவை
காது மூக்கு தொண்டை (ENT), டயாலசிஸ், நெப்ராலஜி, Paediatrics, Orthopaedics, Diabetology, Pulmonology, Dermatology, பொது மருத்துவம் மற்றும் General and laparoscopic Surgery உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சிறுநீரக நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு Advanced Dialysis Unit மற்றும் Isolation Dialysis Unit ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அனுபவமிக்க மருத்துவக் குழு
நவீன மருத்துவ உபகரணங்கள் மட்டுமின்றி, சிறப்பு மருத்துவர்களின் நிபுணத்துவம், திறமையான செவிலியர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடும் ஸ்ரீ சரண் மருத்துவமனையின் முக்கிய பலமாக உள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பு, தரமான சிகிச்சை மற்றும் மனிதநேய அணுகுமுறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கட்டணமில்லாத சிகிச்சைக்கு அனைத்து முன்னணி தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களால் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை. ஆயுத பூஜையை முன்னிட்டு, நோயாளிகளின் நலனுக்காக உறுதுணையாக இருக்கும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஸ்ரீ சரண் மருத்துவமனை தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது.
@block_B@
பிரத்யேக மருத்துவ சேவை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவச் சேவைகளிலும் ஸ்ரீ சரண் மருத்துவமனை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. Gynaecology & Obstetrics, Fertility Care, Advanced Birthing Suites மற்றும் NICU போன்ற நவீன வசதிகள் வாயிலாக பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படுகிறது.
கர்ப்ப கால கண்காணிப்பு முதல் பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை வரை தேவையான மருத்துவ வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.block_B
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு