ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியின் ஏ.எம்.சி., ரோடு முதல் ரவுண்ட் ரோடு வரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் துர்கா உத்தர விட்டிருந்தார். இதையடுத்து கமிஷனர் பிரேம்ஆனந்த் அறிவுறுத்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
நேற்று ஏ.எம்.சி., ரோடு முதல் ரவுண்ட் ரோடு வரை 8 கடைகளின் ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும் இயந்திர வாகனம் மூலம் அகற்றப் பட்டன. மாநகராட்சி திட்டமிடல் பிரிவு அலுவலர் (பொ) சாந்தி தலைமையில் உதவி பொறியாளர்கள் சரண்கார்த்திக், திவ்யபிரசன்னா, தர்ஷினி ஆகியோர் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அப்போது சில கடை உரிமையாளர்ளுக்கும் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
மேலும்
-
அமெரிக்க அமைச்சர் மும்பை வருவது ஏன்?: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
-
சந்தை விலை நிலவரம்
-
இரவிலும் சூரிய ஒளியை வழங்கும் திட்டம்: இந்தியா - அமெரிக்கா நிறுவனங்கள் ஒப்பந்தம்
-
பெட்ரோல் ஏற்றுமதி வரி உயர்வு: 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆனது
-
நுால்கள் வெளியீட்டு விழா
-
ஏரியில் பைபர் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பு