வீடு புகுந்து திருட்டு போலீஸ் விசாரணை

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவைத் திறந்து நகைகளை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரகண்டநல்லுார் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி, 50; நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயலுக்கு சென்றனர். மதியம் 12:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த 7 சவரன் ஆரம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement